UPDATED : அக் 21, 2026 05:58 AM
ADDED : அக் 21, 2026 05:48 AM
ஈரோடு:தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், ஆதார் கார்டுடன் இணைக்காமல், 2,561 ரேஷன் கார்டுகள் உள்ளன.
பொது
வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள்
பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில்லாமல் மத்திய, மாநில
அரசுகள் மானியமும் வழங்குகிறது. இம்மானிய தொகை உரிய
பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய, ரேஷன் கார்டுகள்
அக்குடும்ப தலைவர் அல்லது தலைவியின் ஆதார் கார்டுடன்
இணைக்கப்படுகிறது. தவிர கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார்
கார்டையும் இணைத்து, அவர்களின் கை விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு
உறுதி செய்யப்படுகிறது.
இதுபற்றி உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சத்து, 63,586 முன்னுரிமை
ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.,) உள்ளன. அதில், 9 லட்சத்து, 66,773
உறுப்பினவர்கள்; முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள்
(என்.பி.எச்.எச்.,), 4 லட்சத்து, 2,593 உள்ளன. இரண்டிலும் சேர்த்து, 20
லட்சத்து, 57,719 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில், 20 லட்சத்து,
55,158 பேர் தங்களது ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைத்துள்ளனர். மீதி,
2,561 பேர் இதுவரை இணைக்காமல் உள்ளனர். இவ்வாறு கூறினர்.
