ADDED : நவ 10, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; தீபாவளி பண்டிகை நாளில், காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க, தமிழக அரசு அறிவித்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்ததாக, 28 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
