தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எல்.பி.பி., வாய்க்காலை சீரமைக்க எதிர்பார்ப்பு

எல்.பி.பி., வாய்க்காலை சீரமைக்க எதிர்பார்ப்பு

எல்.பி.பி., வாய்க்காலை சீரமைக்க எதிர்பார்ப்பு


ADDED : நவ 10, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; கீழ்பவானி வாய்க்காலை (எல்.பி.பி.,) துார்வாரி ஆக்ரமிப்புகளை அகற்றி முறையாக ஷட்டர், மதகுகளை நீர்வளத்துறையினர் பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்தாண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்துக்கு இதுவரை நீர் வினியோகிக்கவில்லை. புன்செய் பயிருக்கு டிச.,15 முதல் நீர் விட விவசாயிகள் காத்திருக்கின்றனர். அதற்குள் வாய்க்காலில் ஆக்ரமிப்புகளை அகற்றி, மரம், செடி-கொடிகளை அப்புறப்படுத்தி, மதகுகளை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

கீழ்பவானி பிரதான வாய்க்கால், 124 கி.மீ., நீளம் கொண்டது. 2,000 கி.மீ., அளவுக்கு கிளை வாய்க்கால், கொப்பு வாய்க்கால்கள் உள்ளன. வாய்க்கால்களை துார் வாராததால் மரம், செடி-கொடிகள் முளைத்துள்ளன. மதகுகளில் திருகு சரிவர வேலை செய்வது இல்லை. ஷட்டர்களும் பல இடங்களில் பழுதாகி உள்ளன.

மேலும் மாநகர், புறநகர் பகுதியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. வாய்க்காலில் மராமத்து பணிகளை நீர்வளத்துறையினர் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை. கலெக்டர்களிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இதனால் கடைமடை பகுதிக்கு நீர் வினியோகம் கேள்விக்குறியாகிறது. எனவே வாய்க்காலில் நீர்வளத்துறையினர் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us