UPDATED : நவ 10, 2026 05:12 AM
ADDED : நவ 10, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லுாரிகளுக்கு கடந்த, 6ம் தேதி மாலை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஈரோடு வந்தனர். தீபாவளி பண்டிகை நிறைவு பெற்ற நிலையில், இன்று பள்ளி, கல்லுாரி திறக்கப்படுகிறது.
இதனால் கல்லுாரி மாணவ, மாணவிகள் ஊர் செல்ல கிளம்பியதால் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக கோவை செல்லும் அரசு, தனியார் பஸ்களில் முண்டியடித்து ஏறி சென்றனர். அரசு பஸ்கள் தொடர்ந்து வந்ததால் பயணிகள் சிரமமின்றி ஏறி கொண்டனர். பயணிகள் கூட்டத்தால் பஸ் ஸ்டாண்ட்டில் கணிசமான வியாபாரம் நடந்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
