/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லஞ்ச வழக்கில் ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள்
/
லஞ்ச வழக்கில் ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள்
லஞ்ச வழக்கில் ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள்
லஞ்ச வழக்கில் ஒரே கிராமத்தில் சிக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள்
ADDED : நவ 01, 2025 12:43 AM
பொங்கலுார், திருப்பூர் மாவட்டம் பொங்கலுார் ஒன்றியம் சந்தவநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரனிடம், 750 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் காட்டூர் வி.ஏ.ஓ., செல்லத்துரை, 1999ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்கினார். அதே ஊரை சேர்ந்த விவசாயி பிரதீஸ்வரனிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், 2019-ல் காட்டூர் வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், தண்டல்காரர் ஜெயசீலன் ஆகியோர் சிக்கினர்.
இந்த வரிசையில் நேற்று முன்தினம் கா
ட்டூர் வி.ஏ.ஓ., ஜெயக்குமார், சந்தவ நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தியிடம் பட்டா மாறுதலுக்காக, 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி, கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். லஞ்ச வழக்கில் வெவ்வேறு கால கட்டத்தில் ஒரே ஊர் வி.ஏ.ஓ.,க்கள் சிக்கியது, காட்டூர் கிராம மக்களை வேதனை அடைய வைத்துள்ளது. அதேசமயம் சிக்கிய மூவருமே சந்தவநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்களால் பொறிவைத்து பிடிக்கப்பட்டுள்ளனர்.

