ADDED : ஆக 14, 2025 02:40 AM
நம்பியூர், நம்பியூர் வேமாண்டம்பாளையம், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் செய்து வரும், தனியாருக்கு சொந்தமான பிக்கப் வேன் அரசூரில் இருந்து, நம்பியூர் வழியாக புளியம்பட்டி சென்று கொண்டிருந்தது. வேனை நாகர்கோவிலை சேர்ந்த ரெமிஸ், 37, ஓட்டி வந்தார். அப்போது, நம்பியூர் டவுன் பஞ்., அலுவலகம் அருகே வரும்போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக, வலது பக்கம் நின்று கொண்டிருந்த மற்றொரு பிக்கப் வேனில் மோதி, தாறுமாறாக ஓடி, வாழை இலை வியாபாரம் செய்து வந்த சரோஜினி, 45, நடந்து வந்து கொண்டிருந்த நம்பியூர் - சத்யா நகரை சேர்ந்த தேவி, 44, சுந்தராம்பாள், 43, ஆகியோர் மீது மோதியது. மூன்று பேரும் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.டிரைவர் ரெமீஸ் மீது நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.