/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 3.22 லட்சம் பேர்
/
ஈரோடு மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 3.22 லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 3.22 லட்சம் பேர்
ஈரோடு மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள் 3.22 லட்சம் பேர்
ADDED : நவ 21, 2024 06:24 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 3.22 லட்சம் இளம் வாக்காளர்கள் உள்-ளனர்.தமிழகத்தில் கடந்த அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, 9 லட்சத்து, 50,706 ஆண்கள், 11 லட்சத்து, 1,378 பெண்கள், 3ம் பாலினம், 181 பேர் என, ஈரோடு மாவட்டத்தில், 19 லட்சத்து, 64,676 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 18 முதல், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், 18,626 பேர், 20 முதல், 29 வயதுக்கு உட்பட்டவர்கள், 3 லட்சத்து, 3,840 பேர் என, 30 வயதுக்கு கீழ் இளம் வாக்காளர்கள், 3 லட்சத்து, 22,466 பேர் உள்ளனர்.தவிர, 30 முதல், 39 வயதுக்குள், 3 லட்சத்து, 56,861 பேர், 40 முதல், 49 வயதுக்குள், 4 லட்சத்து, 6,471 பேர் உள்ளனர்.
இந்த வயது பிரிவில்தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 50 முதல், 59 வயதுக்குள், 3 லட்சத்து, 71,824 பேர், 60 முதல், 69 வயதுக்குள், 2 லட்சத்து, 75,744 பேர், 70 முதல், 79 வய-துக்குள், 1 லட்சத்து, 62,750 பேர், 80 வயதுக்கு மேல், 68,560 வாக்-காளர்கள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த, 16, 17 ல் வாக்காளர் சுருக்கத்திருத்த சிறப்பு முகாம் நடந்தது. வரும், 23, 24 அன்றும் முகாம் நடக்க உள்ளது. மேலும் ஆன்லைனில் பதிவும் நடக்கி-றது. வரும், 28 வரை அனைத்து தாலுகா அலுவலகங்களி லும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணி நடக்க உள்ளது என, தேர்தல் பிரிவினர் தெரிவித்-தனர்.

