ADDED : ஜூலை 12, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் வெகு நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில்-33.6 மி.மீ., மழை பெய்தது. நம்பியூர்-21, வரட்டுப்பள்ளம் அணை- 9, அம்மாபேட்டை-6.4, சென்னிமலை-6.2, ஈரோடு-5.4, குண்டேரிப்பள்ளம் அணை-4.2, பெருந்துறை - 4 மி.மீ., மழை பதிவானது.
நேற்றும் மதியம், 2:50 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது.* பெருந்துறையில் மதியம், 2:00 மணிக்கு தொடங்கிய மழை, 2:45 மணி வரை கொட்டியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.