தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அத்தியாவசிய பொருட்கள் கடத்தலில் 336 பேர் கைது

அத்தியாவசிய பொருட்கள் கடத்தலில் 336 பேர் கைது

அத்தியாவசிய பொருட்கள் கடத்தலில் 336 பேர் கைது


ADDED : நவ 15, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் ரேஷன் அரிசி,

மண்ணெண்ணெய், கோதுமை, மானிய விலை யூரியா கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக, 336 பேரை போலீசார் நடப்பாண்டில் இதுவரை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய், கோதுமை மற்றும் மானிய விலை யூரியா, அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்காக கடத்தலும் நடக்கிறது.

இதை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபடுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார், கடந்த ஜனவரி மாதம் அக்., வரை, 319 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 142 டன் ரேஷன் அரிசி, 5.85 டன் கோதுமை, 160 லிட்டர் மண்ணெண்ணெய், 29 டன் மானிய விலை யூரியாவை பறிமுதல் செய்து, 336 பேரை கைது செய்துள்ளனர்.

இதில் தொடர் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய, 22 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us