ADDED : நவ 15, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு,
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அளவில் அஞ்சல் தலை
கண்காட்சி, வரும், 25, 26ல் திண்டலில் ஆலயமணி மகாலில் நடக்க உள்ளது.
பழமையான,
அரிய வகை அஞ்சல் தலைகள், புகழ் பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளர்களால்
காட்சிக்கு வைக்கப்படுகிறது. அனைத்து மாணவர், ஆசிரியர், மக்கள்
இலவசமாக பார்வையிடலாம். கண்காட்சி அரங்கில், பள்ளி
குழந்தைகளுக்காக, '3-டி' காட்சி, நடமாடும் கோளரங்கம், கலை
நிகழ்ச்சி, ஆன் ஸ்பாட் விளையாட்டு கள் உள்ளிட்ட பொழுது போக்கு
அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
