/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் திட்ட பணியில் 35 சதவீதம் நிறைவு
/
குடிநீர் திட்ட பணியில் 35 சதவீதம் நிறைவு
ADDED : மே 02, 2025 01:59 AM
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில், 'அம்ரூத் 2.0' குடிநீர் திட்டத்தில், 35 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாநகராட்சியில்,'அம்ரூத் 2.0' திட்டத்தில் முன் மாதிரியாக ஆறு வார்டுகளில், 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி, 20.47 கோடி ரூபாயில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாயிலாக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணி நடக்கிறது.
இதில், 18.17 கி.மீ., நீளத்துக்கு குடிநீர் குழாய் அமைக்கவும், 1,605 புதிய வீட்டு இணைப்பு வழங்கவும், 23,620 பழைய இணைப்பு என மொத்தம், 25,225 இணைப்புகளுக்கு, 24 மணி நேரம் குடிநீர் வழங்க திட்ட
மிடப்பட்டுள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 30,49,50,56,57,58 ஆகிய ஆறு வார்டுகளில், 'அம்ரூத் 2.0' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தேவைக்கு ஏற்ப மக்கள் குடிநீரை பயன்படுத்துவதால் மாநகராட்சி மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் மட்டம் குறையாமல் இருக்கும். நீர் அழுத்தம் காரணமாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படும். மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீரை ஏற்றும் நேரம் குறைவதால், மின்சார தேவை மாநகராட்சிக்கு கணிசமாக குறையும். இத்திட்டம் இந்தாண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
திட்டத்தில் குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டு மீட்டர் ரீடிங் அடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது 35 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு கூறினர்.

