/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.36 லட்சம் காணிக்கை
/
சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.36 லட்சம் காணிக்கை
சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.36 லட்சம் காணிக்கை
சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.36 லட்சம் காணிக்கை
ADDED : அக் 24, 2024 02:52 AM
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல்களில், பக்தர்கள் காணிக்கையாக, ரூ.36 லட்சம் செலுத்தியிருந்தனர்.
சென்னிமலை, முருகன் கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்த உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று உண்டியல்-களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார் முன்னி-லையில் இப்பணி நடந்தது. உண்டியல் திறப்பின் மூலம் ரொக்க-மாக, 36 லட்சத்து, 39 ஆயிரத்து, 378 ரூபாய், தங்கம், 51 கிராம், வெள்ளி, 1,905 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கோவில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை சரக ஆய்வர் ஸ்ரீகுகன், அயல் பணி ஆய்வாளர் மாணிக்கம், கோவில் பணியாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.