/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா
/
37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா
ADDED : மார் 25, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
37 ஆண்டில் முதல் முறையாகஅரசு பள்ளியில் ஆண்டு விழா
பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் தொட்டியனுார் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கி, 37 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் பள்ளியில் முதல் முறையாக ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. துடுப்பதி பஞ்., முன்னாள் தலைவர் கவிதா அன்பரசு தலைமை வகித்தார்.
பெருந்துறை வட்டார கல்வி அலுவலர் தனபாக்கியம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை மேரி எப்சிபாய் வரவேற்றார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.