தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மரத்தில் கார் மோதி 4 பேர் பலத்த காயம்

மரத்தில் கார் மோதி 4 பேர் பலத்த காயம்

மரத்தில் கார் மோதி 4 பேர் பலத்த காயம்


ADDED : அக் 16, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூர் அருகே சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த நடராஜ், 28; வெள்ளையம்பாளையத்தை சேர்ந்த செல்வி, 65, இவரின் மகன் குமார், 36, இவரின் மனைவி கஸ்துாரி, 31, ஆகியோர், திருச்செந்துார் கோவிலுக்கு எர்டிகா காரில் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.

நள்ளிரவு, 1:00 மணிக்கு செம்புளிச்சாம்பாளையம் தனியார் பள்ளி அருகில் வந்தபோது, எதிரில் வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்ற டிரைவர் குமார், இடது பக்கம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளியமரத்தில் மோதியது. காரின் இடது பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணித்த நால்வரும் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நடராஜ் புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us