ADDED : அக் 16, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கரூர் வடக்கு புகலுார் முருகம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்குமார், 42. தொழிலாளி. திருமணம் ஆனவர்.
இவரது சொந்த ஊர் ஈரோடு பெரிய சேமூர் மாரியம்மன் கோவில் வீதி. மனைவி, குழந்தைகளுடன் முருகம்பாளையத்தில் வசித்தார். கடன் சுமையால் கடந்த ஆக.,30ம் தேதி வீட்டில் இருந்து மாயமானவர் வீடு திரும்பவில்லை. தாய் சரஸ்வதி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரியசேமூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராசு மகன் எபினேசர், 17; அரசு ஐ.டி.ஐ., மாணவர். நண்பர்களை பார்த்து வருவதாக வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் சுசீலா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
