/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் 4 வழிப்பாலம்: அமைச்சர் ஆய்வு
/
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் 4 வழிப்பாலம்: அமைச்சர் ஆய்வு
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் 4 வழிப்பாலம்: அமைச்சர் ஆய்வு
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் 4 வழிப்பாலம்: அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 11, 2025 06:20 AM
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்கு-ளிக்கு பாசன கால்வாய் செல்கிறது. இந்நிலையில், சென்னிமலை ரோட்டில் இருந்து முத்தம்பாளையம் பகுதி
க்கு செல்லும் சாலையின் இடது புறத்தில், கால்வாய் செல்லும் நிலையில் பாதுகாப்பு வேலி எதுவும் இல்லாததால் விபத்துக்கான அபாயம் நிலவி வந்தது. இதனையடுத்து, ரூ.23 லட்சம் செலவில் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே துவங்கப்பட்டது.
இதேபோல், 5.48 கோடி மதிப்பில் சென்னிமலை சாலையை நான்கு வழிச்
சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சென்னிமலை சாலையை கடக்கும் நஞ்சை ஊத்-துக்குளி கால்வாயில், நான்கு வழிப்பாலம் அமைப்பது குறித்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு மேற்-கொண்டார். அப்போது பாலத்தின் கட்டமைப்பு, கட்டுமான பணி-களின் போது போக்குவரத்து மாற்றம் செய்வது உள்ளிட்ட பல்-வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.கலெக்டர் கந்தசாமி, ஆணையர் அர்பித்ஜெயின், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உடன் இருந்தனர்.

