/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கெமிக்கல் வாங்கி ரூ.1.10 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி.,யிடம் மனு

ADDED : டிச 11, 2025 06:19 AM
ஈரோடு:ஈரோடு சாய்ராம் டை கெம், த்ரீ ஸ்டார் டிரேடர்ஸ் ஈரோடு, குண-சீலன் உள்ளிட்ட, 16 கடைக்காரர்கள் கூட்டாக, ஈரோடு
எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதா-வது:
ஈரோடு மாவட்டத்தில், டையிங் கெமிக்கல் வியாபாரம் செய்-கிறோம். சித்தோடு கங்காபுரம் வாரி பிரின்டர்ஸ், வாரி டெக்ஸ்டைல்ஸ் முகவரியில் உள்ள சாய ஆலைக்கு கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்து டைஸ், கெமிக்கல்ஸ் உள்-ளிட்டவற்றை சப்ளை செய்து வருகிறோம். இதற்கு முறையாக ஜி.எஸ்.டி., பில் செய்துள்ளோம். பில் தொகையை தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் வாரி டெக்ஸ் நிறுவனர் நித்யாவிடம் பல-முறை கேட்டுள்ளோம்.ஆனால் பில் தொகையை கொடுக்காமல், ஏமாற்றும் நோக்கில் காலம் தாழ்த்தி வருகிறார். பில் தொகையை வாங்கி தர கோரி, ஏற்கனவே சித்தோடு போலீசில் புகார் செய்தோம். ஆனால் நடவ-டிக்கை இல்லை. இதுவரை அவர்கள் தனி நபர் மற்றும் நிறுவ-னங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, 1 கோடியே, 10 லட்-சத்து, 94 ஆயிரத்து 203 ரூபாய். அவர் எங்களை ஏமாற்றி உள்ளார். நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனவே, எங்க-ளுக்கு சேர வேண்டிய தொகையை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது