ADDED : அக் 12, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
அருகே ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 30;
கூலி தொழிலாளி. இவரது மனைவிக்கு சில நாட்களாக அதே பகுதியை சேர்ந்த
கோகுல்ராஜ், 34, இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி தொந்தரவு
செய்துள்ளார்.
இதுகுறித்து தேவராஜ் எச்சரித்தும் தொடர்ந்து மெசேஜ்
அனுப்பியதால் ஆத்திரமடைந்தார். தனது நண்பர்களான நந்தகுமார், 19,
பிரசாந்த், 23, தரனேஷ்-, 23, ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜை
தாக்கியுள்ளார். கோகுல்ராஜ் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார்,
நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.
