ADDED : அக் 12, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
சாமிநாதபுரத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி சரவணன், 33; இவர் கோபியை
சேர்ந்த சதீஷுடன், 25, சேர்ந்து, பாரியூர் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில்
மது குடித்துள்ளார்.
பாரில் இருந்து வெளியே வந்த இருவருக்கும் வாய்
தகராறு ஏற்பட்டது. சதீஷ் தகாத வார்த்தை பேசி, கீழே உடைந்து கிடந்த
டைல்ஸ் கல்லால் சரவணனை தாக்கினார். காயமடைந்த சரவணன் மேல்
சிகிச்சைக்காக, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அவர் புகாரின்படி, கோபி போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
