ADDED : அக் 12, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே அளுக்குளியை சேர்ந்தவர் நாகூர் கனி, 40, கூலி தொழிலாளி; கடந்த,
5ம் தேதி இரவு யமாகா பைக்கில், கோபி-சத்தி சாலையில் சென்றார்.
மூலவாய்க்கால் என்ற இடத்தில் வேகத்தடையை கவனிக்காமல் ஏறியபோது
நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்தார்.
மேல் சிகிச்சைக்காக சேலம்
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இதுகுறித்து அவரின் மனைவி ரபியத்துல்
பசீரியா புகாரின்படி, கடத்துார்
போலீசார் விசாரிக்கின்றனர்.
