/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
/
எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
ADDED : நவ 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி, மொடச்சூர் அருகே ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் சண்முகம், 55; பங்களாப்புதுார் போலீஸ் ஸ்டேசன் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.
இவரின் மனைவி தவமணி, 49; மொடச்சூர் அருகே திரு.வி.க., வீதியில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க மரக்கதவை உடைத்து, இரு பீரோவில் இருந்த, நான்கு பவுன் தங்க நகை மற்றும் 100 கிராம் வெள்ளிக்காசு திருட்டு போனது தெரிய வந்தது. தவமணி புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

