ADDED : அக் 25, 2026 07:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், மழை நீர் தேங்காமல் இருக்க மண்டலத்துக்கு, 10 பேர் என, 40 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கவும், தேங்கும் பட்சத்தில் அடைப்பை அகற்றி, விரைவாக வழிந்தோடும் வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும், மண்டலத்துக்கு 10 பேர் என மொத்தம் 40 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மழைநீர் தேங்கிய பகுதிக்கு சென்று, தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு கூறினர்.
