/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சபரிமலை கோவிலுக்கு 40 டன் காய்கறி, மளிகை
/
சபரிமலை கோவிலுக்கு 40 டன் காய்கறி, மளிகை
ADDED : டிச 23, 2024 09:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: சபரிமலை சன்னிதானத்தில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு தேவைப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை, புன்செய்புளியம்பட்டி சபரிமலை பண்ணாரி அம்மன் அன்னதான அறக்கட்டளை பக்தர்கள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
நடப்பாண்டு அன்னதானத்துக்கு, அரிசி, துவரம் பருப்பு, சுண்டல், கரும்பு சர்க்கரை, 1,000 கிலோ ரவை, 500 பெட்டி பிஸ்கட் உள்ளிட்ட மளிகை பொருட்கள், தக்காளி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பூசணி, முட்டைகோஸ்,அரசாணி உள்ளிட்ட காய்கறிகள் என, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை நேற்று அனுப்பி வைத்தனர்.

