புளியம்பட்டி நகராட்சியில் 42 தீர்மானம் நிறைவேற்றம்
புளியம்பட்டி நகராட்சியில் 42 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 31, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஜனார்த்தனன் தலைமை
வகித்தார். கமிஷனர் கருணாம்பாள் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள்
தங்கள் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதி, பிரச்னைகளை
முன்வைத்து பேசினர். தலைவர், கமிஷனர் பதிலளித்தனர்.
அம்ருத் 2.0
திட்டத்தில் குழாய் மற்றும் பெருவல் உபகரணங்கள் தரமின்றி உள்ளதாக
புகார் தெரிவிக்கப்பட்டது. தரமான குழாய் பதிக்க வேண்டுகோள்
விடப்பட்டது. கூட்டடத்தில், 42 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
