ADDED : அக் 31, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை, :பெருந்துறை
நகராட்சி பெருந்துறை டவுன் பகுதியில் வர்த்தக கடைகளின் முன் சாலையை
ஆக்கிரமித்து விளம்பர பலகை, விளம்பர தட்டி வைத்துள்ளனர்.
மேலும்
தினசரி மார்க்கெட் அருகில் சென்னிமலை சாலை பஸ் ஸ்டாப்பில் பூக்கடை,
சோழீஸ்வரர் கோயில் அருகில் பாதைகளில் வைத்துள்ள பழக்கடை, துணிக்கடை,
காஞ்சிக்கோவில் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் போலீஸ்
குடியிருப்பு முன்புள்ள தள்ளுவண்டி கடைகள், வாரச்சந்தை வரை ரோட்டில்
இருபுறமும் உள்ள தள்ளுவண்டி கடைகளை நிரந்தரமாக அகற்ற
வலியுறுத்தி, பெருந்துறை போலீஸ் தரப்பில், நகராட்சி நிர்வாகத்துக்கு
கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
