/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி நகராட்சி பகுதியில் 42 குடிநீர் இணைப்பு 'கட்'
/
கோபி நகராட்சி பகுதியில் 42 குடிநீர் இணைப்பு 'கட்'
ADDED : மார் 11, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: நடப்பு நிதியாண்டு முடிவ டைய குறுகிய நாட்களே உள்ள நிலையில், கோபி நகராட்சியில் வரி வசூல் தீவிரம் அடைந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: சொத்து வரியில், இதுவரை, 7.93 கோடி ரூபாய் வசூலித்துதுள்ளோம். இன்னும் ஒரு கோடி ரூபாய் பாக்கியுள்ளது. குடிநீர் வரியில், 1.05 கோடி வசூலித்த நிலையில், 27 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. மொத்த இலக்காக, 17 கோடி ரூபாயில், 13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாளாக குடிநீர் செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதன்படி கடந்த பிப்., முதல் நேற்று வரை, 42 இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.