/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் ஈரோட்டில் பெண்கள் உள்பட 435 ஆசிரியர்கள் கைது

ADDED : ஜூலை 18, 2025 01:34 AM
ஈரோடு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், அரசாணை,
243ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் மறியல் போராட்டத்துக்கு, டிட்டோ ஜாக் அமைப்பினர், நேற்று, இன்று அழைப்பு
விடுத்திருந்தனர்.
இதன்படி ஈரோடு தாலுகா அலுவலகம் முன் தொடக்க ஆசிரியர்கள் நேற்று ஒன்று கூடினர். அனைவரும் ப.செ.பார்க் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றபோது போலீசார் தடுத்ததால் சாலை மறியலில்
ஈடுபட்டனர். இதனால், 261 பெண்கள் உள்பட, 435 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியலுக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்தது. டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை வகித்தார்.
தமிழக ஆசிரியர் கூட்டணி மகளிரணி செயலாளர் ரமாராணி போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கராஜ், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தால் நேற்று, ஈரோடு மாவட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள் வராமல் விடுப்பு எடுத்தனர் என்று பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.