/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு-சித்தோடு 4 வழி சாலையில் 44 கண்காணிப்பு கேமரா அமைப்பு
/
ஈரோடு-சித்தோடு 4 வழி சாலையில் 44 கண்காணிப்பு கேமரா அமைப்பு
ஈரோடு-சித்தோடு 4 வழி சாலையில் 44 கண்காணிப்பு கேமரா அமைப்பு
ஈரோடு-சித்தோடு 4 வழி சாலையில் 44 கண்காணிப்பு கேமரா அமைப்பு
ADDED : ஜன 01, 2024 11:23 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து கோபி, சத்தி வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் ஈரோடு-கோபி இடையே தற்போது பணி நடந்து வருகிறது. ஈரோட்டில் ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து சித்தோடு வரை பெரும்பாலான பணி நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், முக்கிய சந்திப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஸ்வஸ்திக் கார்னரில் இருந்து சித்தோடு வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள் திரும்புவதற்கு வசதியாக சாலையின் நடுவே இடைவெளி அமைக்கப்பட்ட சந்திப்பு பகுதிகளில், 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் பஸ் நிறுத்த நிழற்கூடங்களில், 22 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாலை சந்திப்பு பகுதி கேமரா இணைப்புகள், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து சீரமைப்பு, திருட்டு, வழிப்பறி, கடத்தல், பழங்குற்றவாளிகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையையும் கண்காணிக்க முடியும். வை-பை கேபிள் பொருத்தியவுடன், கண்காணிப்பு கேமராக்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.