/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 48 பேருக்கு பணி
/
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 48 பேருக்கு பணி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 48 பேருக்கு பணி
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்ற 48 பேருக்கு பணி
ADDED : டிச 24, 2025 08:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., உட்பட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பித்தோருக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது.
கடந்தாண்டுகளில் எஸ்.ஆர்.பி., எழுத்து தேர்வில், 8 பேர், டி.ஆர்.பி., எழுத்து தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்தாண்டு நடந்த குரூப்-2, குரூப்-4, டி.என்.யு., - எஸ்.ஆர்.பி., - டி.ஈ.டி., ஆகிய தேர்வுகளிலும் பலரும் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த, 2024 டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வி.ஏ.ஓ., - ஊரக வளர்ச்சி துறை, வணிக வரித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் உட்பட பல்வேறு அரசு துறை பணிகளில்,12 பேர், குரூப்-2, 2ஏ முதனிலை தேர்வில், 25 பேர், முதன்மை தேர்வில், 4 பேர், நடப்பாண்டு குரூப்-4 தேர்வில், 7 பேர் தேர்ச்சி பெற்று, துறை ஒதுக்கீட்டுக்காக காத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.