/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
63 மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
/
63 மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 19, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மொபைல் போன் மாயமானது, திருட்டு போனதாக, சைபர் கிரைம் போலீஸ், ஆன்லைன் மூலமும் புகார் பதிவானது. தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மாயமான, திருட்டு போன, 63 மொபைல் போன்களை போலீசார் மீட்டனர்.
இவற்றின் மதிப்பு, 10.53 லட்சம் ரூபாய். இவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி., சுஜாதா தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., வேலுமணி, இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, எஸ்.ஐ., செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.