/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் ஓராண்டில் 6,600 நாய்களுக்கு கு.க.,
/
மாநகரில் ஓராண்டில் 6,600 நாய்களுக்கு கு.க.,
ADDED : மார் 02, 2025 07:03 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 2024 ஜன., முதல் தற்போது வரை, 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்-பட்டுள்ளது.
ஈரோடு மாநகர் மற்றும் கிராமப்பகுதியிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. அவற்றை முறையாக கட்-டுப் படுத்த எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆடு, மாடு, கோழி மற்றும் மனிதர்களை கடித்து, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி ஈரோடு கால்நடை துணை, இணை இயக்குனர் அலுவலக அலுவலர்கள் கூறியதாவது:
'அனிமல் வெல்பேர் போர்டு' விதிப்படியே நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முறை-யான அறுவை சிகிச்சை கூடம், அரசு அனுமதி பெற்று செயல்பட வேண்டும். மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் இயங்-குகிறது.பயிற்சி பெற்றவர்கள் மூலமே நாய்களை பிடிக்க வேண்டும். அவற்றை கொன்றுவிடக்கூடாது. பிடிபட்ட நாய்க்கு முறையாக உணவு வழங்கி, 5 நாட்களுக்கு ஆரோக்கியம் பேணி, கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும். அதன்பின் மீண்டும், 5 நாட்கள் பரா-மரித்து, எங்கு பிடிபட்டதோ, அதே இடத்தில் திரும்ப விட வேண்டும். இதுபோன்ற வசதி பஞ்., நகராட்சி, டவுன் பஞ்.,களில் ஏற்படுத்த இயலாது. நாய்களை பிடிக்க விருப்பம் உள்ளவர்கள், அதற்கான அமைப்பை ஏற்படுத்த மாவட்ட அளவி-லான கமிட்டியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஈரோடு மாநகராட்சி பகுதியில், 2024 ஜன., முதல் தற்போது வரை, 6,600 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்-பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.