sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாநகராட்சியில் இணையும் 7 ஊராட்சி; அதிகாரிகள் தகவல்

/

ஈரோடு மாநகராட்சியில் இணையும் 7 ஊராட்சி; அதிகாரிகள் தகவல்

ஈரோடு மாநகராட்சியில் இணையும் 7 ஊராட்சி; அதிகாரிகள் தகவல்

ஈரோடு மாநகராட்சியில் இணையும் 7 ஊராட்சி; அதிகாரிகள் தகவல்


ADDED : செப் 30, 2024 06:52 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியுடன், ஏழு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஈரோடு நகராட்சி, 2008ல் மாநகராட்சியானது. அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர். 2010ல் வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ. அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம், 46 புதுார், லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டது. லக்காபுரம், 46 புதுார் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றாததால், இரு ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம், 109.52 ச.கி.மீ. பரப்பானது.

கடந்த, 2011 கணக்கெடுப்பின்படி மாநகராட்சி மக்கள் தொகை, 4.98 லட்சம். நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சி வருவாயை அதிகப்படுத்தவும், மாநகர பகுதியில் இட நெருக்கடி நிலவுவதாலும், மாநகராட்சியின் எல்லை பகுதியை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

மாநகராட்சியையொட்டி உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எலவமலை, கதிரம்பட்டி, கூரபாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 46 புதுார், லக்காபுரம் என மொத்தம் ஏழு ஊராட்சி பகுதிகளை, ஈரோடு மாநகராட்சியோடு இணைக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏழு ஊராட்சிகள் இணைக்கப்படும் பட்சத்தில், மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை, 60ல் இருந்து, 75ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. பவானி நகராட்சியுடன் ஆண்டிக்குளம் மற்றும் குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிகளும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் லக்கம்பட்டி பேரூராட்சி, வெள்ளாளபாளையம், கலங்கியம், மொடச்சூர், பாரியூர், குள்ளம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளும், சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சியும், புஞ்சைப்புளியம்பட்டி நகராட்சியில் நொச்சிக்குட்டை, மாதம்பாளையம், நல்லுார் ஆகிய மூன்று ஊராட்சிகளும் இணைக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில், 42 பேரூராட்சிகள் உள்ள நிலையில், பெருந்துறை பேரூராட்சி மட்டும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. லக்கம்பட்டி பேரூராட்சி, கோபி நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பேரூராட்சிகளின் எண்ணிக்கை, 40 ஆக குறையும். மாவட்டத்தில் சில ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.






      Dinamalar
      Follow us