/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பர்கூர்மலையில் பள்ளத்தில் பாய்ந்த கார் மரத்தில் சிக்கியதால் 7 பேர் தப்பினர்

ADDED : நவ 02, 2024 04:05 AM
அந்தியூர்: அத்தாணி அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 26; சவண்டப்பூரை சேர்ந்தவர் கதிர்வேல், 56; உட்பட ஏழு பேர், தீபாவளி விடுமுறையை கொண்டாடும் விதமாக, இனோவா காரில் பர்கூர்மலையை சுற்றிப்பார்க்க நேற்று மதியம் சென்றனர்.
தாமரைக்கரை--கர்ககேண்டி சாலையில், வேலம்பட்டி என்ற இடத்தில், எதிரில் வந்த டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க, டிரைவர் காரை ஓரம் கட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது. ஆனால், ௩௦ அடி துாரம் சென்ற நிலையில், ஒரு மரத்தில் சிக்கி கார் நின்றது. அந்த வழியாக சென்-றவர்கள் பார்த்ததால், பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். அங்கு சென்ற போலீசார், பள்ளத்தில் இறங்கி ஏழு பேரையும் மீட்டனர். இதில் மணிகண்டன், கதிர்வேலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற ஐந்து பேரும் லேசான காயத்-துடன் தப்பினர்.