ADDED : அக் 24, 2026 06:06 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினமும்,
இரவில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக
குண்டேரிப்பள்ளத்தில் - 74 மி.மீ., மழை பதிவானது.
பிற இடங்களில்
பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி-64, கவுந்தப்பாடி-63.4, கொடிவேரி
அணை-59.4, சத்தியமங்கலம்-53, மொடக்குறிச்சி-51, பெருந்துறை-35,
இலந்தைகுட்டைமேடு-22.8, அம்மாபேட்டை-18.6, ஈரோடு-17,
வரட்டுப்பள்ளம்-16, பவானி-13.5, நம்பியூர்-12, கொடுமுடி-11,
பவானிசாகர்-10.8, சென்னிமலை-9, தாளவாடி-7.1 மி.மீ., மழை பதிவானது.குளமான பஸ் ஸ்டாண்ட்
சத்தியமங்கலம்
சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை, 2:20 மணிக்கு தொடங்கிய
கனமழை ஒரு மணி நேரத்துக்கு கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல
இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது. சத்தி பஸ் ஸ்டாண்டில் பல
இடங்களில் குளம் போல் தேங்கிய மழை நீரால் பயணிகள் தவிப்புக்கு
ஆளாகினர்.
நள்ளிரவில் சாரல் மழை
ஈரோடு மாநகரில் நேற்று
நள்ளிரவு, 1:00 மணி முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது. விடியற்காலை,
4.30 மணி வரை இடைவெளி விட்டு விட்டு பெய்த நிலையில் அதன்பின்
வேகமெடுத்தது. ஒரு மணிநேரம் நீடித்து பின் மீண்டும் சாரலாக மாறி, 6.30
மணிக்கு நின்றது. இதனால் காலை, 9:00 மணி வரை குளிருடன், பனியும்
நிலவியது. மாவட்டம், மாநகரில் பெய்யும் தொடர் மழையால், மழை மற்றும்
கசிவுநீரால், காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து
ஓடுகிறது.
விடிய விடிய மழை
பவானி மற்றும் சுற்றுவட்டார
பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் காலை, 8:00 மணி வரை தொடர் மழை
பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட
நேரிட்டது.
