தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்டாசு தயாரிப்பில் கவனம் ஆய்வு கூட்டத்தில் அறிவுரை

பட்டாசு தயாரிப்பில் கவனம் ஆய்வு கூட்டத்தில் அறிவுரை

பட்டாசு தயாரிப்பில் கவனம் ஆய்வு கூட்டத்தில் அறிவுரை


ADDED : அக் 24, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தற்காலிக பட்டாசு உரிமதாரர், வாணம் - மத்தாப்பு தயார் செய்யும் நிறுவனங்களுக்கான ஆய்வு கூட்டம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.

பட்டாசு தயாரிப்பு பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே தயாரித்தும், விற்பனை செய்யவும் வேண்டும். உதிரி பட்டாசு, சீன பட்டாசுகளை விற்பனை செய்ய தடை உள்ளது. பட்டாசு கடைகள் உரிய விதிமுறைகளின்படி தனி இடத்தில் வைக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், குடியிருப்பு, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்தது, 50 மீட்டர் துாரத்துக்கு அப்பால் கடை அமைக்க வேண்டும். தண்ணீர், மணல் வாளி, தண்ணீர் தொட்டி, மணல் மூட்டை, தீயணைப்பான், ஈரச்சாக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வாணம், மத்தாப்பு தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களை சேமித்தல், கலவை செய்தல், தயாரித்தலை தனித்தனி அறைகளில் அமைக்க வேண்டும். இவற்றை உலர்த்த, திறந்த வெளியை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், வயதானவர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us