ADDED : நவ 04, 2026 07:43 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே பெரிய புலியூரில் உள்ள கோசாலையில், இந்து பாதுகாப்பு படை
சார்பில், கோ ரத யாத்திரை நேற்று துவங்கியது. முன்னதாக கோசாலையில்
உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து
ரதத்தில் கொண்டு செல்லப்படும் பசுமாடு மற்றும் கன்று சிலையை,
அலங்கரிக்கப்பட்ட தோஸ்த் வாகனத்தில் ஏற்றி அதற்கும் பூஜை செய்தனர்.
பவானி
கூடுதுறையில் தொடங்கிய யாத்திரை தினமும் பல்வேறு மாவட்டங்களை
கடந்து, 48வது நாளில், பாண்டிச்சேரியில் காந்தி சிலை முன்
நிறைவடைகிறது.அங்கு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்புரையாற்றவுள்ளதாகவும் அமைப்பினர் தெரிவித்தனர்.
