/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயிலில் கிடந்த பையில் 8.2 கிலோ கஞ்சா
/
ரயிலில் கிடந்த பையில் 8.2 கிலோ கஞ்சா
ADDED : மே 31, 2025 06:25 AM
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார், சம்பல்பூர் - ஈரோடு விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். சட்ட விரோத பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை அறிய, சேலம் - ஈரோடு இடையே சோதனை நடத்தியபோது, பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை சோதித்தனர். அதில், 8.200 கிலோ கஞ்சா இருந்தது. சூரம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
* சூரம்பட்டி போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமையிலான குழுவினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே சந்தேகத்துக்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்து வந்தனர். இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பீரோ பைட், 25, என்பவர் வைத்திருந்த பையில், 3 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் ஈரோட்டில் வணிக வளாகம், தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.