ADDED : ஜூலை 27, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு-பழைய
கரூர் சாலையில் பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம், 1:55
மணியளவில் சில ஆடுகள் தண்டவாளத்தை கடந்தன. அப்போது வந்த பயணிகள்
சிறப்பு ரயில் ஆடுகள் மீது மோதியது. இதில் ஒன்பது ஆடுகள் பலியாகின
ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்தனர். ஆடுகளின் உரிமையாளர்
குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகள் பலியானதை பார்க்க
மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. லேசான காயமுற்ற ஆடுகளை,
டூவீலரில் சிலர் துாக்கி சென்றதாகவும் தெரிகிறது.
