/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மது பாட்டில் ஏற்றிச்சென்ற வேன் மீது மோதிய கார் ஒருவர் பலி; ரூ.10 லட்சம் மதிப்பு மது சேதம்
/
மது பாட்டில் ஏற்றிச்சென்ற வேன் மீது மோதிய கார் ஒருவர் பலி; ரூ.10 லட்சம் மதிப்பு மது சேதம்
மது பாட்டில் ஏற்றிச்சென்ற வேன் மீது மோதிய கார் ஒருவர் பலி; ரூ.10 லட்சம் மதிப்பு மது சேதம்
மது பாட்டில் ஏற்றிச்சென்ற வேன் மீது மோதிய கார் ஒருவர் பலி; ரூ.10 லட்சம் மதிப்பு மது சேதம்
ADDED : அக் 28, 2024 03:36 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள வீரணம்பா-ளையம் பஞ்., பகவதிபாளையத்தில், டாஸ்மாக் மது பான கிடங்கு அமைந்துள்ளது.
இங்கிருந்து காங்கேயம் பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்ய, 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு, ஒரு ஈச்சர் வேன் நேற்று மதியம், ௧௨:௦௦ மணிக்கு புறப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த சோமசுந்தரம், 40, ஓட்டினார். குடோன் ஊழியர்களான காங்கே-யத்தை சேர்ந்த சரவணகுமார், 31, அஸ்வின், 21, மற்றும் நத்த-காடையூரை சேர்ந்த கிளீனர் கார்த்தி, 40, வேனில் சென்றனர். குடோனில் இருந்து காங்கேயம்-கரூர் சாலையில் சிறிது துாரம் வேன் சென்ற நிலையில், எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், சாலை நடுவில் ஈச்சர் வேன் கவிழ்ந்தது. இதில் மது பாட்டில்கள் சாலையில் உடைந்து சிதறின. மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாட்டில் உடைந்து விட்டதாக தெரிகிறது.அதேசமயம் காரில் வந்த, திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் வேலை பார்க்கும், உ.பி., மாநிலத்தை சேர்ந்த நசீம், 38, சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்த முகமது பர்மன், 24; ஈச்சர் வேன் டிரைவர் சோமசுந்தரம் படுகாயம் அடைந்தனர். இரு-வரும் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கோவை தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேனில் வந்த மற்ற மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். சாலையில் மது பாட்டில் நொறுங்கி விழுந்ததால், 4 மணி நேரம் போக்குவ-ரத்து பாதித்தது. காங்கேயம் போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுபான கிடங்கு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், உடைந்த கண்ணாடி பொருட்கள், உடையாத மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர்.