/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை மாத்திரையுடன் ௪ கல்லூரி மாணவர் கைது விற்பனைக்கு கொண்டு சென்றபோது சிக்கினர்

ADDED : மார் 06, 2024 02:13 AM
பவானி:பவானி அருகே, போதை மாத்திரையை விற்பனைக்கு கொண்டு சென்ற, நான்கு கல்லுாரி மாணவர்களை போலீசில் சிக்கினர்.
அம்மாபேட்டை
எஸ்.ஐ., ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், -அம்மாபேட்டை அருகே
ஊமாரெட்டியூர் பிரிவில் நேற்று காலை வாகனத் தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஹீரோ ஸ்பிளெண்டர், யமாஹா ஆர்-௧௫
பைக்கில் வந்த வாலிபர்கள், போலீசை கண்டதும் திருப்ப முயன்றனர். அவர்களை
போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையத்தை அடுத்த ஒட்டமெத்தை நாகராஜ் மகன் ஸ்ரீதர், 21;
எஸ்.பி.பி., காலனி செல்வம் மகன் பழனிசாமி, 20; ஈரோடு, கருங்கல்பாளைம்
பாலு மகன் தமிழரசன், 24, சுப்ரமணி மகன் நவீன், 20, என்பது தெரிந்தது.
திருச்செங்கோடு
தனியார் கல்லூரி அருகே போதை மாத்திரைகளை அடையாளம் தெரியாத
நபர்களிடமிருந்து வாங்கி வந்து, அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர்
பிரிவு அருகே வரும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை
செய்ய கொண்டு வந்ததும் தெரிந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, பத்து போதை மாத்திரை, இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
பவானி
கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நான்கு பேரும் வெவ்வேறு
கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருவதாக,
அம்மாபேட்டை போலீசார் தெரிவித்தனர்.