ADDED : அக் 05, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சூசையபுரம், கரளவாடி, கல்மண்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. படிப்படியாக மழை அதி-கரித்தது.
பின் இடைவெளி விட்டு பெய்தது. மழையால் தொட்டகாஜனுார்-மெட்டல்வாடி சாலையில் தரைப்பாலத்தை மழைநீர் மூழ்கடித்து சென்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழைநீரின் அளவு குறைந்த பின் வாகனங்கள் சென்றன.
* ஆசனுார் அருகே கொள்ளேகால் சாலையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால், சாலை-யோர மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. வனத்துறையினர் மூங்-கிலை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவ-ரத்து தொடங்கியது. இதனால் மாலை, ௫:௦௦ மணி முதல், ௬:௩௦ மணி வரை போக்குவரத்து பாதித்-தது.