/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தும் பலனில்லாத சோகம்
/
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தும் பலனில்லாத சோகம்
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தும் பலனில்லாத சோகம்
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தும் பலனில்லாத சோகம்
ADDED : மே 25, 2024 02:24 AM
காங்கேயம்: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் பாய்ந்து கொடுமுடி அருகே காவிரியில் நொய்யல் ஆறு கலக்கிறது. இதில் கரூர் மாவட்டத்தில் ஊட்டுக்கால்வாய் மூலம், 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெற உதவுகிறது. ஆனால், திருப்பூர் சாயப்பட்டறைகளின் சாயக்கழிவு நீரால், நொய்யல் ஆற்று தண்ணீர் மாசடைந்து விட்டது. கால்நடைகள் குடிப்பதற்கே லாயக்கற்றதாகி விட்டது.
தற்போது கோவை, திருப்பூர் மாவட்டகளில் கன மழை பெய்வதால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 400 கன அடி தண்ணீர் சென்றது. ஆனால், நீரில் டி.டி.எஸ்., அளவு, 1,300 ஆக இருந்தது. டி.டி.எஸ்., தன்மை, 500 ஆக இருந்தால்தான் விவசாயத்துக்கு தண்ணீரை பயன்படுத்த முடியும். இதனால் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தும், பலனில்லாத நிலையே உள்ளது.