/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிலும் பெண் மாயம்
/
ஐ.ஏ.எஸ்., அகாடமியில் பயிலும் பெண் மாயம்
ADDED : மே 18, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோபி, கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த ஜவகர் மனைவி ஸ்ரீமதி, 22; ஈரோட் டில் ஒரு ஐ.ஏ.எஸ்., அகாடமி யில் போட்டி தேர்வுக்கு, ஸ்ரீமதி படித்து வருகிறார். கடந்த, 15ல் ஈரோட்டில் ஒரு தனியார் பள்ளியில் நடந்த வகுப்புக்கு உறவினருடன் வந்தார்.
அங்கிருந்து ஐ.ஏ.எஸ்., அகாடமி அலுவலகத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன் கோபியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த ஸ்ரீமதி, கோபி போலீசில் ஆஜரானார். போலீசார் அறிவுரை வழங்கி ஜவகருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாய-மாகியுள்ளார். ஜவகர் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் விசா-ரிக்கின்றனர்.