நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே பெரிய கொடிவேரி குள்ளநாய்க்கனுாரை சேர்ந்தவர் குமார், 43; இவரின் மனைவி அமுதா. நெசவு தொழிலாளிகளான இருவரும், வாடகை வீட்டில் வசிக்கின்றனர். நேற்று காலை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் வீட்டில் இருந்து புகை வரவே, அக்கம்பக்கத்தினர் சத்தி தீயணைப்பு நிலையத்துக்கும், குமாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
குமார் வீட்டுக்கு வந்தபோது, வீட்டுக்குள் பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது. சுவாமி படம் முன் ஏற்றபட்ட விளக்கில், காற்றில் பறந்த ஸ்கிரீன் துணி பட்டதில், தீ விபத்து ஏற்பட்டு தெரிந்தது.