/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புது காரில் 'டெஸ்ட் டிரைவ்' சென்றபோது டூவீலர் மீது மோதியதில் தொழிலாளி பலி

ADDED : அக் 27, 2024 01:07 AM
பு.புளியம்பட்டி, அக். 27-
புன்செய்புளியம்பட்டியை அடுத்த சொலவனுாரை சேர்ந்தவர் சம்பத், 40; ஈரோட்டில் டாடா கார் ஷோரூமில் டாடா டியாகோ காரை புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக ஷோரூம் ஊழியர் மணிகண்டன், 31, நேற்று வந்தார். இருவரும் காரில் பவானிசாகர் நோக்கி நேற்று மதியம் சென்றனர். அப்போது காரை மணிகண்டன் ஓட்டியுள்ளார்.
பவானிசாகர் வனத்துறை அலுவலகம் அருகே சென்றபோது, அதே திசையில் காருக்கு முன்னால் பவானிசாகரை அடுத்த சித்தன்குட்டையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ரங்கநாதன், 45, அவரது மகள் ஏஞ்சலின், 24, பைக்கில் சென்றனர். வலது புறமாக திரும்பியபோது பைக் மீது கார் மோதியது. இதில் தந்தை, மகள் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரங்கநாதன் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயமடைந்த ஏஞ்சலினை அப்பகுதி மக்கள் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.