/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவில் மூலவர் சிலையை வல்லுனர் குழுவினர் ஆய்வு
/
சென்னிமலை முருகன் கோவில் மூலவர் சிலையை வல்லுனர் குழுவினர் ஆய்வு
சென்னிமலை முருகன் கோவில் மூலவர் சிலையை வல்லுனர் குழுவினர் ஆய்வு
சென்னிமலை முருகன் கோவில் மூலவர் சிலையை வல்லுனர் குழுவினர் ஆய்வு
ADDED : ஏப் 11, 2024 07:36 AM
சென்னிமலை : சென்னிமலை, முருகன் கோவிலில் முருகப்பெருமான் மூலவர் சிலையை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வல்லுனர் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில், புகழ் பெற்ற மலைக்கோவிலாக விளங்கக்கூடிய சென்னிமலை மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, மாநில வல்லுனர் குழு உறுப்பினரான முனைவர் ராஜா பட்டர், தக்கார் நந்தகுமார், தட்சிணாமூர்த்தி ஸ்தபதி ஆகியோர் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அவர்களை கோவில் சார்பாக செயல் அலுவலர் சரவணன், தலைமை குருக்கள் ராமநாத சிவச்சாரியார் ஆகியோர் வரவேற்றனர். முருகன் கோவிலில் உள்ள மூலவர் சிலையை ஆய்வு செய்தனர். வல்லுனர் குழுவினர், செயல் அலுவலரிடம் சிலை குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.