/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ்சை முந்தியபோது விபத்தில் வாலிபர் பலி
/
பஸ்சை முந்தியபோது விபத்தில் வாலிபர் பலி
ADDED : மார் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே சென்னம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 27, கூலி தொழிலாளி.
அத்தாணியில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்று விட்டு, சென்னம்பட்டியில் உள்ள வீட்டுக்கு, பிளாட்டினா பைக்கில் நேற்று மாலை, 4:30 மணியளவில் திரும்பினார். அத்தாணி-அந்தியூர் சாலையில் கரட்டூர் மேடு அருகே சென்றபோது முன்னால் சென்ற பஸ்சை முந்த முயன்றார். அப்போது எதிரில் வந்த மற்றொரு டவுன் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

