/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
/
அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
ADDED : ஆக 04, 2025 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில், மக்கள் நேற்று திரண்டனர். மணலில் கன்னிமார் உருவங்களை செய்து, பூ மற்றும் பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து பூஜை செய்தனர்.
பின் அமராவதி நதியை வணங்கி, பெண்கள் புது தாலி அணிந்து கொண்டனர். தாராபுரம் நகரின் இருந்து கூட்டம், கூட்டமாக பெண்கள் மற்றும் குடும்பத்தினர், முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு சென்று பூஜை செய்தனர். இதனால் அமராவதி ஆற்றங்கரை, மக்கள் திரளில் மூழ்கியது.

