ADDED : ஜூலை 18, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஆடி மாத பிறப்பை, ஈரோடு மாநகர மக்கள், தேங்காய் சுட்டு நேற்று கொண்டாடினர்.
மகாபாரத
போருக்கும் தேங்காய் சுடும் நிகழ்வுக்கும் தொடர்புள்ளதாக
நம்பப்படுவதால், ஆண்டுதோறும் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
வீரப்பன்சத்திரம் அருகில் காவேரி ரோடு, சுப்ரமணிய வீதி பகுதி சிறுவர்,
சிறுமிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி வீடுகளின் முன்
நெருப்பை பற்ற வைத்து தேங்காய் சுட்டு, கோவிலில் உடைத்து, அனைவரும்
பகிர்ந்து உண்டனர். இதேபோல் சம்பத்நகர், கருங்கல்பாளையம்,
வெட்டுக்காட்டு வலசு, பெரியவலசு என மாநகரின் பல்வேறு பகுதிகளில்
தேங்காய் சுடும் நிகழ்வு, வழக்கமான உற்சாகத்துடன், மக்கள்
கொண்டாடினர்.
