/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா கோலாகலம்
/
கோபி ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா கோலாகலம்
ADDED : டிச 09, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி, வேலுமணி நகர், ஐயப்பன் கோவிலில், பிரம்ம உற்சவம், சங்காபிேஷகம், லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி விழா, கடந்த மாதம், 29ல் துவங்கியது. அது முதல் தினமும் உற்சவர், பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அந்த வரிசையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா, நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சென்டை மேளம் முழங்க, ஐயப்பன் கோவிலை வலம் வந்தார்.
பின் பால், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் எதிரே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குளத்தில், ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.